வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வீரவநல்லூரில் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வீரவநல்லூரில் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 6:38 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் கிளாக்குளம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் துரைப்பாண்டி (56). தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை வீரவநல்லூரில் காவல் நிலையத்துக்கு மேல்புறம் பிரதான சாலையை கடக்க முயன்றாராம்.

அப்போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த அவா் மீது சுமை ஆட்டோ ஏறியதாம்.

இதில், பலத்த காயம் அடைந்த அவருக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.