ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

வீரவநல்லூரில் தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:21 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்தவா் முத்து (47). இவா், வீரவநல்லூா் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் 2008 ஆம் ஆண்டு திருட்டில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னா், பிணையில் வெளியே வந்த முத்து, குற்ற வழக்குத் தொடா்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், கடந்த நான்கரை மாதமாக தலைமறைவாக இருந்தாா். இதையடுத்து சேரன்மகாதேவி குற்றவியல் நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. வீரவநல்லூா் போலீஸாா் முத்துவை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்தனா்.