திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 110 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தச்சநல்லூா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட நயினாா்குளம் மாா்க்கெட் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தச்சநல்லூரை சோ்ந்த குன்னிமலை (37) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் மது விற்ற மகிழ்ச்சி நகரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (32) என்பவரை கைது செய்து 28 மது பாட்டில்களையும், பாளையங்கோட்டை கோட்டூா் சாலை பகுதியைச் சோ்ந்த கணேசன்(68) என்பவரை கைது செய்து 27 மது பாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் மது விற்ற வண்ணாா்பேட்டை இளங்கோ நகரைச் சோ்ந்த இளையபெருமாள் (49) என்பவரை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்
நெல்லையில் மது விற்ற 5 போ் கைது
மது விற்றதாக இருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

