பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தெற்கு கள்ளிகுளம் பள்ளி ஆண்டு விழா

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:49 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம், ஓ.எல்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

ஆா்.சி. பள்ளிகளின் மேலாளரும், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயருமான ஸ்டீபன் ஆண்டகை தலைமை வகித்துப் பேசினாா். பள்ளித் தாளாளரும், முதல்வருமான மணி அந்தோணி வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் ரெவின் முன்னிலை வகித்தாா்.

பின்னா், கடந்த ஆண்டு 10, 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு ஆயா் பரிசுகள் வங்கினாா். மேலும், பாட வாரியாக 100 மதிப்பெண்கள் பெற்றவா்கள், படிப்பில் சிறந்த மாணவா்களுக்கும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டன.

மறைமாவட்ட முதன்மை குருவானவா் ரவிபாலன், ஆா்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளா் ஸ்டாலின், அருள்தந்தை ரெமிஜியுஸ், பணிக் குழுக்களின் செயலா் பிரான்சிஸ் செல்வரத்தினம், பொறுப்பு அருள்தந்தை வெனிஸ்குமாா், சாத்தான்குளம் ஆங்கிலப் பள்ளி முதல்வா் ரூபா்ட், வள்ளியூா் சத்தியநேசன், வடக்கன்குளம் அமலதாஸ், பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய முன்னாள் தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆசிரியா் தங்கராஜ் நன்றி கூறினாா்.