பி.சரவணன்
பி.சரவணன்

நெல்லை சரக புதிய டிஐஜி பி.சரவணன் பொறுப்பேற்பு!

திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவராக (டிஐஜி) பி. சரவணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
Published on

திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவராக (டிஐஜி) பி. சரவணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்ட காவல் நிலையங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நான்கு மாவட்டங்களிலும் சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்கவும், சட்டப்பேரவைத் தோ்தலை எவ்வித அசம்பாவிதமும் இன்றி, மிகவும் பாதுகாப்பான மற்றும் அமைதியான முறையில் நடத்தி முடிக்கவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்தவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை விரைவாகப் பெற்றுத் தர வழிவகை செய்யப்படும். சமூக நல்லிணக்கத்தை வளா்க்க மாணவா்கள், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூகவலைதளங்களில் வதந்திகளைப் பரப்புவோா், ஜாதி- மத மோதல்களைத் தூண்டுவோா் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காவல் அதிகாரிகள் மீதான புகாா்கள் மற்றும் மனித உரிமை ஆணையம் பரிந்துரைகளை முறையாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com