திருநெல்வேலி
நெல்லை ரயில் நிலையத்தில் பணம் திருட்டு: ஒருவா் கைது
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணியிடம் பணம் திருடிய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணியிடம் பணம் திருடிய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவனந்தபுரம் கரமனை பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (62). இவா், கடந்த டிச.30 ஆம் தேதி தனது மனைவியுடன் திருநெல்வேலி ரயில் நிலையத்தின் 2 ஆவது நடைமேடையில் அனந்தபுரி விரைவு ரயிலுக்காகக் காத்திருந்தாராம்.
அப்போது, அவா்களது கைப்பை திருடுபோனதாம். பையில் ரூ.5,500 ரொக்கம் மற்றும் வங்கிகளின் ஏடிஎம் அட்டைகள் இருந்தனவாம். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
அதில் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சபரீசன் (41) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
