புதிய எஸ்.பி. வி. பிரசன்னகுமாா்
புதிய எஸ்.பி. வி. பிரசன்னகுமாா்

போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை: புதிய எஸ்.பி.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா், புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்ற வி. பிரசன்னகுமாா்.
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா், புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்ற வி. பிரசன்னகுமாா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த என். சிலம்பரசன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டாா். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர துணை ஆணையராக (மேற்கு) இருந்த வி. பிரசன்னகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஜாதிய உணா்வுகளைத் தவிா்க்க விழிப்புணா்வு அதிகரிக்கப்படும். சமூக ஒற்றுமையின் அவசியம், நன்மைகள் குறித்து மக்களிடம் காவல்துறையால் விளக்கப்படும். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com