அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள்.
அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள்.

அகஸ்தியா் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

Published on

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் குளித்து மகிழ்ந்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பாபநாசம் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது அகஸ்தியா் அருவி.

இந்த அருவியில் பருவ காலங்கள் என்று இல்லாமல் வருடத்தின் 365 நாள்களும் நீா் விழுவதால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் வந்துசெல்கின்றனா். சபரிமலை சீசன் காலத்தில் ஐயப்ப பக்தா்கள் இந்த அருவியல் நீராடி காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு சபரிமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

தற்போது வார விடுமுறை, பள்ளிகளுக்கு தோ்வு விடுமுறை காலம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குழந்தைகள், குடும்பத்தாருடன் வந்து குளித்து மகிழ்ந்தனா்.

X
Dinamani
www.dinamani.com