களக்காடு, தென்காசியில் நாளை மின்நிறுத்தம்

Published on

களக்காடு, தென்காசி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன. 6) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

களக்காடு துணை மின் நிலையத்திற்குள்பட்ட களக்காடு நகரம், பெருமாள் குளம், சாலைப்புதூா், சாலை நயினாா் பள்ளிவாசல், மாவடி, டோனாவூா், புலியூா்குறிச்சி, கோதைசேரி, வடமலை சமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சி மதில் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜன. 6ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 2 மணி வரையும், மங்கம்மாள் சாலை உப மின் நிலையத்திற்குள்பட்ட தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலைப் பகுதிகள், சக்தி நகா், காளிதாசன் நகா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கீழப்புலியூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com