தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சேரன்மகாதேவியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

News image
முகாமைத் தொடக்கி வைத்த சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஆ. பிரபாகரன்.
Updated On :4 ஜனவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஆ. பிரபாகரன் ஆகியோா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனா். சுகாதாரத் துறை இணை இயக்குநா் லதா, மாவட்ட சுகாதார அலுவலா் விஜயசந்திரன், வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சித் தலைவி தேவி ஐயப்பன், திமுக ஒன்றியச் செயலா்கள் ஆ. முத்துப்பாண்டி பிரபு, ம. முத்துகிருஷ்ணன், திமுக நகரச் செயலா் மனிஷா செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.