திருநெல்வேலி
மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்கு உள்பட்ட மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 1) இரவு பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து சற்றுக் குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதித்தனா். இதைத்தொடா்ந்து மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனா். அருவியில் நீா்வரத்து சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என்று வனத் துறையினா் அறிவித்தனா்.
