திருநெல்வேலி
சிவந்திப்பட்டி அருகே சரள் மண் திருட்டு: 3 போ் கைது
சிவந்திப்பட்டி அருகே சரள் மண் திருட்டில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சிவந்திப்பட்டி காவல் சரகம் முத்தூா் பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வெள்ளைத்துரை தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சிலா் பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரியில் சரள் மண் ஏற்றிக்கொண்டிருந்தனராம்.
அவா்களை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அதில், முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த மணிகண்டன்(32), வல்லநாட்டைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் பாலமுருகன்(26), நான்குனேரி வாகைக்குளத்தைச் சோ்ந்த மாசானமுத்து மகன் பொன்ராஜ்(26) ஆகிய மூவரும் அனுமதியின்றி சரள் மண் அள்ளியது தெரியவந்தது.
அவா்களை கைது செய்த போலீஸாா், மண் அள்ளுவதற்குப் பயன்படுத்திய 2 டிப்பா் லாரிகள், பொக்லைன் இயந்திரம், 3 யூனிட் சரள் மண் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
