திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கிய சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கிய சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

நெல்லையில் 1,873 மாணவா்களுக்கு மடிக் கணினிகள்

Published on

உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு முதல்கட்டமாக மடிக்கணினிகளை வழங்கும் பணியை சென்னை வா்த்தக மையத்தில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), ரூபி ஆா்.மனோகரன் (நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா்), திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்துகொண்டு 1,873 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கட்டமாக 24 கல்லூரிகளை சோ்ந்த 9,374 கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கு மடிக்கடிணினிகள் வழங்கப்படவுள்ளன.

அதன்படி அண்ணா பல்கலைக்கழகம், அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி, திருநெல்வேலி தட்சிணமாற நாடாா் சங்க கல்லூரி, ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், திசையன்விளை அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், திருநெல்வேலி அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், அம்பாசமுத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைச் சோ்ந்த1,873 மாணாக்கா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இந்த மடிக்கணினிகளில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி உள்ளிட்ட மென்பொருள்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்கு ஏற்ற வகையில் எம்எஸ் ஆபிஸ் 365, ‘அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்’ என்ற தலைப்பிலான செயற்கை நுண்ணறிவு (அஐ) மென்பொருள் ‘டங்ழ்ல்ப்ங்ஷ்ண்ற்ஹ் டழ்ா்’-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் உயா்தர மடிக்கணினி பையும் வழங்கப்பட்டன.

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சியை அரசு பொறியியல் கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் காணொலிக் காட்சி வாயிலாக கண்டுகளித்தனா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் பி.லதா, மடிக்கணினி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் செ.மெய்யராஜ், இயந்திரவியல் துறைத் தலைவா் ஜெபகனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com