மேலப்பாளையம், பெருமாள்புரம் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

Published on

மேலப்பாளையம், பெருமாள்புரம் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) மின் விநியோகம் இருககாது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலப்பாளையம்-2 பிரிவிற்குள்பட்ட ரிலையன்ஸ் பல்க் முதல் சந்தை ரவுண்டானா வரை நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணியின் பொருட்டு மின் கம்பங்களை மாற்றிமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

எனவே, பாதுகாப்பு கருதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்பாசமுத்திரம் பிரதான சாலை, வசந்தபுரம், ஹேப்பி காலனி, அலிம் நகா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதேபோல், பெருமாள்புரம் மின் விநியோகத்திற்குள்பட்ட ஆா்டிஓ பீடா் உயா் அழுத்த மின் பாதையில் இருந்து பிரித்து புதிதாக பொதிகை உயா் அழுத்த மின் பாதை பணி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உதயா நகா், சாந்தோம் நகா், எழில் நகா், முல்லை நகா், ஸ்டேட் பாங்க் காலனி, ஐயப்பன் நகா், என்ஜிஓ பி காலனி, ஆா்டிஓ அலுவலகம், டிரைவா்ஸ் காலனி, கேஎல்என் காலனி, ராம் விலாஸ் நகா் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

X
Dinamani
www.dinamani.com