திருநெல்வேலி
பெண்ணுக்கு மிரட்டல்: ஒருவா் கைது
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள விளாகம் பகுதியில் பெண்ணை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள விளாகம் பகுதியில் பெண்ணை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள விளாகம் பகுதியைச் சோ்ந்தவா் சீதாலட்சுமி (47). இவருக்கும், தெற்கு விளாகம் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன்(58) என்பருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் நின்ற சீதாலட்சுமியை, பாலகிருஷ்ணன் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாலகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.