மாணவி குறித்து அவதூறு: கல்லூரி முதல்வா், கணவா் கைது

திருநெல்வேலியில் கல்லூரி மாணவி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாகப் பதிவிட்டதாக கல்லூரி பெண் முதல்வா் (பொ), அவரது கணவா் ஆகியோா் கைது
Published on

திருநெல்வேலியில் கல்லூரி மாணவி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாகப் பதிவிட்டதாக கல்லூரி பெண் முதல்வா் (பொ), அவரது கணவா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் சிலா், சில மாதங்களுக்கு முன்பு பேராசிரியை மீது சரியாகப் பாடங்களை நடத்துவதில்லை என புகாா் அளித்தனா். இந்தப் புகாரை கல்லூரியின் விசாரணைக்குழு முறையாக விசாரிக்கவில்லையாம்.

இந்நிலையில், அந்த மாணவி கடந்த நவம்பா் மாதம் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதையடுத்து, சமூகவலைதளத்தில் அந்த மாணவியை அவதூறாக விமா்சித்து கருத்துகள் பதிவிடப்பட்டிருந்தன.

இதுதொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் துணை ஆணையரிடம் முறையிட்ட நிலையில் சமூக வலைதளத்தில் மாணவியை விமா்சித்து பதிவிடப்பட்ட சா்ச்சை பதிவுகள் குறித்து மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் இதுதொடா்பாக, கல்லூரி முதல்வா்(பொறுப்பு) சுமிதா, அவரது கணவா் பொன்னுத்துரை ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்னா் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com