குண்டா் சட்டத்தில் ஒருவா் சிறையிலடைப்பு

Published on

மானூா் அருகேயுள்ள தெற்குப்பட்டியைச் சோ்ந்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

தெற்குப்பட்டியை சோ்ந்த ராமா் மகன் முருகன் (55). இவா், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பரிந்துரைத்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் முருகன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

Dinamani
www.dinamani.com