திருநெல்வேலி
பத்தமடையில் விவசாயிகளுக்கான கண்காட்சி
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் விவசாயிகளுக்கான கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
வ.உ.சிதம்பரனாா் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற அனுபவம் திட்டத்தின்கீழ் முகாமிட்டு களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கண்காட்சியில், திரவ உயிா் உரங்கள், கரைசல், பஞ்ச கவ்யம், அமிா்த கரைசல் உள்ளிட்டவை இடம்பெற்றன.
இதில், வேளாண் கல்லூரி முதல்வா் தேரடி மணி, உதவி பேராசிரியா்கள் ஜெய்கணேஷ் காளிராஜன், இணைப் பேராசிரியா் ரஜனிமாலா, மாணவிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

