சித்த மருத்துவக் கல்லூரியில் தமிழ் நிறை பொங்கல் விழா

சித்த மருத்துவக் கல்லூரியில் தமிழ் நிறை பொங்கல் விழா

Published on

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தமிழ் நிறை பொங்கல் என்ற தலைப்பில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகம் முழுவதும் வண்ண கோலமிட்டனா். கல்லூரி முதல்வா் மல்லிகா பொங்கல் இடுவதை தொடங்கி வைத்தாா். சூரியவழிபாடு, சித்தா் வழிபாடு நிகழ்ச்சிகளும், மாணவா்- மாணவகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாணவா்-மாணவியா் வேட்டி-சேலை என பாரம்பரிய ஆடை அணிந்து ஆட்டம்- பாட்டத்துடன் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனா்.

டிவிஎல்08சித்தா

தமிழ் நிறை பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

Dinamani
www.dinamani.com