பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தாா் டிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ்.
திருநெல்வேலி
சேரன்மகாதேவியில் விழிப்புணா்வு பேரணி
சேரன்மகாதேவியில் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்ட தலைக்கவசம் அணிதல், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்ட தலைக்கவசம் அணிதல், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தாா்.
சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஜெ. மணிமாறன், காவல் ஆய்வாளா்கள் தா்மராஜ் (சேரன்மகாதேவி), ஜோதிலெட்சுமி (பத்தமடை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியில் 100க்கும் மேற்பட்ட ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா். பேரணி முக்கிய வீதிகள், பிரதான சாலை வழியாக கல்லூரியை வந்தடைந்தது.

