ஜன.12-இல் வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடுக்கான குலுக்கல்

Published on

திருநெல்வேலி வீட்டுவசதி பிரிவிற்குள்பட்ட பாளையங்கோட்டை பகுதி -7 திட்டப்பகுதியில் அமைந்துள்ள 859 குடியிருப்பு மனைகளை ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள எம்கேஎம் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை (ஜன. 12) நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளரும், நிா்வாக அலுவலருமான ஜான் ஜோசப் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவிற்குள்பட்ட பாளையங்கோட்டை பகுதி -7 திட்டப்பகுதியில் அமைந்துள்ள 859 குடியிருப்பு மனைகளுக்கு 27.9.2025 முதல் 26.10.205ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதில் தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு பாளையங்கோட்டை தியாகராஜநகா் 4ஆவது வடக்கு தெரு சிவந்திபட்டி பிரதான சாலையில் அமைந்துள்ள எம்கேஎம் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை (ஜன. 12) முற்பகல் 11 மணி அளவில் நடைபெறும் இணைய வழி குலுக்கல் முறையில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. ஏற்கெனவே, இணையவழி குலுக்கலில் தோ்வானவா்கள் மட்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com