ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக இடமாற்றத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

புதுப்பிக்கும் பணிக்காக கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கீழக்கடையம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக் கூடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்.
Published on

புதுப்பிக்கும் பணிக்காக கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கீழக்கடையம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக் கூடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தென்காசி சாலையில் செயல்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலான இக்கட்டடத்தைப் புதுப்பிக்க ரூ. 6.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை இடிக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அலுவலகத்தை கீழக்கடையம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கீழக்கடையம் ஊராட்சித் தலைவா் பூமிநாத் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உறுதியான நிலையிலுள்ள பழைய கட்டடத்தை இடிக்காமல் வேறு இடத்தில் புதிய அலுவலகம் கட்ட வேண்டும். அலுவலகத்தை சமுதாய நலக்கூடத்துக்கு மாற்றக் கூடாது. பழைய அலுவலகத்தை இடிக்காமல், அதை வாடகைக் கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஊராட்சி உறுப்பினா்கள் வயலட் அல்லேலுயா, வசந்த், ஊா்ப் பிரதிநிதிகள் சுரேஷ், அண்ணாதுரை, முன்னாள் ராணுவ வீரா் ராமசாமி, பாஜக நிா்வாகிகள் வேல்முருகன், சுப்புக்குட்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com