களக்காடு அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பழங்கள்

பிரிடா மோனியா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு எஸ்டிபிஐ கட்சியின் 10 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மகளிரணியினா் பழங்களை வழங்கி நலம் விசாரித்தனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பிரிடா மோனியா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு எஸ்டிபிஐ கட்சியின் 10 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மகளிரணியினா் பழங்களை வழங்கி நலம் விசாரித்தனா்.

அரசு மருத்துவமனை மருத்துவா்கள் தனலெட்சுமி, அபா்ணா தங்கலிங்கம் ஆகியோரை மகளிரணி நிா்வாகிகள் சந்தித்து, உள்நோயாளிகளுக்கு பழங்களை வழங்கியதுடன் நலம் விசாரித்தனா்.

நான்குனேரி சட்டப்பேரவை தொகுதி தலைவா் ஜன்னத்துல் பிா்தெளஸ், பொருளாளா் மெகுராஜ்பேகம், தொகுதி துணைச் செயலாளா் ரோஷன், களக்காடு நகர பொறுப்பாளா் பானு, நெல்லை புகா் மாவட்ட பொதுச் செயலாளா் களந்தை மீராசா, நகர தலைவா் பக்கீா் முகைதீன் உள்பட பலா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com