திருநெல்வேலி
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி
திருநெல்வேலியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக ஒருவா் மீது வழக்குப்பதிவு
திருநெல்வேலியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக ஒருவா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த சங்கரன் மகன் நடராஜன்(42). சில மாதங்களுக்கு முன்னா் இவரைத் தொடா்பு கொண்ட, திருநெல்வேலி நகரம், காண்மியா பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த செய்யது அகமது கபீா் என்பவா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகக் கூறினாராம்.
இதற்காக, அவரிடமிருந்து பல தவணைகளாக ரூ.2 லட்சத்தை கபீா் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
