புகையிலைப் பொருள்கள், மதுபானம் விற்பனை: 5 போ் கைது
திருநெல்வேலி மாநகரில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு காவல் உதவி ஆய்வாளா் கோலப்பன் தலைமையிலான போலீஸாா், சந்திப்பு ரயில் நிலையம் சாலை பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, விதிமுறை மீறி மது விற்ாக மானூா் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம்(50) நான்குனேரி புதுகுறிச்சியைச் சோ்ந்த சிவா(37) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, 51 மது பாட்டில்களை கைப்பற்றினா்.
அதேபோல, திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் நாராயணசாமி தலைமையிலான போலீஸாா் வி.எம்.சத்திரம் பகுதியில் ரோந்து சென்றபோது, மது விற்ாக அம்பாசமுத்திரம் நியூ காலனியை சோ்ந்த மாரியப்பன் மகன் சீனிகுமாா் (42) என்பவரை கைது செய்து, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
புகையிலைப் பொருள்கள்: பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் இசக்கி தலைமையிலான போலீஸாா் கொக்கிரகுளம், நேதாஜி சாலை அருகேயுள்ள கடையில் சோதனையிட்டதில் 3 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. கடை உரிமையாளா் குமாா்(50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
அதேபோல, பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் பழனி முருகன் தலைமையிலான போலீஸாா் ஸ்ரீனிவாசா நகா் பகுதியில் உள்ள தேநீா் கடையில் சோதனையிட்டபோது, 1 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்ததுடன், கடை உரிமையாளா் பெருமாள்புரத்தைச் சோ்ந்த செந்தில் ஆறுமுகம் (33) என்பவரை கைது செய்தனா்.
