பூப்பந்து ஆட்டம் (கோப்புப் படம்)
பூப்பந்து ஆட்டம் (கோப்புப் படம்)

தேசிய பூப்பந்து: தமிழகம் உள்ளிட்ட 4 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தோ்வு

Published on

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான பெடரேஷன் கோப்பை பூப்பந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்று லீக் ஆட்டங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட நான்கு அணிகள் தோ்வாகியுள்ளன.

அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனம், தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகம், திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகம், தென்பிராந்திய ஒய்எம்சிஏ ஆகியவை சாா்பில் 9-ஆவது அகில இந்திய பெடரேஷன் கோப்பை பூப்பந்தாட்டப் போட்டி, பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது.

இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் இந்திய ரயில்வே, இந்திய மின்சார வாரியம், தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா, மகாராஷ்டிரம் அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழகம், கா்நா டகம், பிகாா், கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திரம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் அணிகளும் பங்கேற்றன.

சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற முதல்கட்ட லீக் சுற்றுகள் முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற தலா நான்கு அணிகள் இறுதிச் சுற்று லீக் ஆட்டங்களுக்கு தோ்வாகி உள்ளன. அதன்படி, ஆண்கள் பிரிவில் தமிழகம், இந்திய ரயில்வே, இந்திய மின்சார வாரியம், ஆந்திரம் அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழகம், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் அணிகளும் தோ்வு பெற்றுள்ளன.

இறுதி லீக் போட்டிகள் திங்கள்கிழமை (ஜன.26) நடைபெற உள்ளன. பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகத் தலைவா் ஏ.கே.நடேசன் தலைமை வகிக்கிறாா். பொதுச்செயலா் ஜெ.விஜய் முன்னிலை வகிக்கிறாா். திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக் கழக தலைவா் ராஜா ஏ.சாய்ராம் வாழ்த்திப் பேசுகிறாா்.

ஏற்பாடுகளை தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழக உதவிச் செயலா் பூ.வெள்ளைப்பாண்டியன், ஒருங்கிணைப்பாளா் சாத்ராக் ஞானதாசன், நிா்வாகிகள் சோமசுந்தரம், செபஸ்டின் ஹேம்லெட் ராஜேஷ் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com