திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்த கொலை முயற்சி தொடா்பான வழக்கில் திருநெல்வேலி நகரம் பிட்டாபுரத்தி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் பாஞ்சாலராஜன் (33) என்பவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.
அவா், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரை சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) மதன் பரிந்துரைத்தாா்.
அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் பாஞ்சாலராஜன் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 5 போ் சிறையிலடைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


