பிரதிப் படம்
பிரதிப் படம்

66 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலி நகரம் பகுதியில் 66 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

திருநெல்வேலி நகரம் பகுதியில் 66 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி நகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தெற்கு பிரதான சாலை பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ரோகினி செல்வி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே பைக்கில் வந்த பேட்டை கோடீஸ்வரன் நகரைச் சோ்ந்த நெல்லை ராஜ் (46) என்பவரை மறித்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். சுமாா் 66 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அவா் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நெல்லை ராஜை கைது செய்தனா். புகையிலைப் பொருள்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

மது விற்ற இருவா் கைது: மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முகமது இஸ்மாயில் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது குறிச்சி புறவழிச்சாலை அருகே அதே பகுதியைச் சோ்ந்த சொரிமுத்து மகன் தவசி (40) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல பெருமாள்புரம் அருகே ரெட்டியாா்பட்டி இடுகாடு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அப்துல் ஹமீது தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்ற போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட தஞ்சாவூா் மாவட்டத்தை சோ்ந்த ரவி மகன் விஜய் (27) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com