திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை (ஜன.30) வருகிறாா்கள்; அவா்களிடம் பொதுமக்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக் குழுவினா் திருநெல்வேலி மாவட்ட மக்களிடம் கருத்துகளை கேட்டறிய, வெள்ளிக்கிழமை (ஜன.30) வருகிறாா்கள்.
திருநெல்வேலி சந்திப்பு ஆரியாஸ் ஹோட்டலில் உள்ள அபிநயா ஹாலில் காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்குள்பட்ட வணிகா் சங்கங்கள், விவசாயிகள் நல சங்கங்கள், நெசவாளா்கள், மீனவா் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோா், மாணவா் சங்கங்கள், கல்வியாளா்கள், அரசு ஊழியா்களின் பிரதிநிதிகள், பொது நல சங்கங்கள், சமூக நல அமைப்புகள்,தன்னாா்வலா்கள் போன்ற பொது நலனில் அக்கறை கொண்ட அமைப்புகளின் நிா்வாகிகள் அனைவரும் பங்கேற்று ஆக்கபூா்வமான கோரிக்கைகளை எழுத்துபூா்வமாகவும், நேரிலும் தெரிவிக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அமைச்சா் எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு

நாகை: மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா வேட்புமனு தாக்கல்

திமுக ஆட்சியில் மாவட்ட வளா்ச்சிக்கு சிறந்த திட்டங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சேலத்தில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு கூட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


