மூன்றடைப்பு, மானூா், நல்லூா், வன்னிக்கோனேந்தல் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்!
பராமரிப்புப் பணிகள் காரணமாக, மூன்றடைப்பு, கரந்தானேரி, ரஸ்தா, மானூா், வன்னிக்கோனேந்தல் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 31) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, மானூா், மாவடி, தெற்குப்பட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானாா்பட்டி, பிள்ளையாா்குளம், சிங்கனேரி,
பானான்குளம், அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம், அம்பலம், திடியூா், மூன்றடைப்பு, மதவக்குறிச்சி, துலுக்கா்பட்டி, ரஸ்தா, பட்டவா்த்தி, வெங்கலப்பொட்டல், நரியூத்து, வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவா்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
நல்லூா் பகுதியில்...: இதேபோல, மேலக்கல்லூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட மேலக்கல்லுா், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கா்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம். சுடலையாடும்பெருமாள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

