திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி
அரசு மருத்துவமனையில் உறுதிமொழியேற்பு
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி ‘ஸ்பா்ஷ் தொழுநோய் விழிப்புணா்வு‘ உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. மருத்துவ கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம், நிா்வாக அலுவலா் செந்தில்வேல், செவிலியா் ஆசிரியா் செல்வன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.