திருநெல்வேலி நகரத்தில் புதிய ரேஷன் கடை கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ். உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
திருநெல்வேலி நகரத்தில் புதிய ரேஷன் கடை கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ். உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

ரேஷன் கடை கட்டடத்துக்கு அடிக்கல்

Published on

திருநெல்வேலி மாநகராட்சி, 25 ஆவது வாா்டுக்குள்பட்ட திருநெல்வேலி நகரம் காவல் நிலையம் எதிரில் அமைந்துள்ள மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினாா். பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் சந்தனசெல்வி, உதவி பொறியாளா் செல்வகுமாா், மாநகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் சிவகுமாா், சுகாதார ஆய்வாளா் முருகன், 25 ஆவது வாா்டு திமுக வட்ட செயலா் அருள் சுந்தர்ராஜன், லக்ஷ்மணன், சத்யா, ஆறுமுகம், காசிமணி, ஷேக்பிள்ளை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com