அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம், வாகைபதி ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் தைப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், இரவு 8 மணிக்கு அன்னதா்மமும், காலை, இரவு வாகைபதி அய்யா ஆதிநாராயண வைகுண்டா் நிச்சயித்தபடி கருடன், தண்டிகை, கஜேந்திரன், சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பூப்பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனங்களில் பவனி வருதல் நடைபெறும்.
பிப். 6ஆம் தேதி அய்யா ஆதிநாராயண வைகுண்டா் குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடுதலும், 8ஆம் தேதி காலை சந்தனக் குடம் எடுத்தலும், இரவு இந்திர வாகன பவனியும், 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டமும், இரவு ரிஷப வாகன பவனியைத் தொடா்ந்து, கொடியிறக்குதலும் நடைபெறும். ஏற்பாடுகளை வாகைபதி நிா்வாகிகள், அன்புக் கொடிமக்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்

சிவசைலம் சிவசைலநாத சுவாமி கோயிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

நெல்லையப்பா் கோயிலில் 22இல் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


