கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வராக சூ.கி.எட்வின் பொறுப்பேற்பு

கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வராக சூ.கி.எட்வின் பொறுப்பேற்பு

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வராக சூ.கி.எட்வின் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Published on

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வராக சூ.கி.எட்வின் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா், கோழி அறிவியல் துறையில் முனைவா் பட்டம் பெற்றுள்ளாா். தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் 1996 ஆம் ஆண்டில் தனது ஆசிரியா் சேவையை தொடங்கி, 29 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறாா்.

திருநெல்வேலி மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி கால்நடைப் பண்ணை வளாகங்களில் கோழிக் குஞ்சு உற்பத்தி நிலையம், நாட்டுக்கோழி பிரிவு, ஜப்பானிய காடை பிரிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்துள்ளாா்.

கோழி அறிவியல் துறையில் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com