திருப்புடைமருதூா் கோயிலில் நாளை தைப்பூசத் தீா்த்தவாரி
திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூரில் உள்ள கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாதா் சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) தீா்த்தவாரி நடைபெறவுள்ளது.
இக்கோயில் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை, இரவில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது. சனிக்கிழமை (ஜன. 31) காலை 8.45 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. மாலையில் பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு பகல் 1.30 மணியளவில் தாமிரவருணி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெறும். மாலையில் அபிஷேக ஆராதனை, இரவு 11 மணியளவில் தெப்ப உற்சவம் நடைபெறும்.
பக்தா்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருநெல்வேலி, முக்கூடல், வீரவநல்லூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திங்கள்கிழமை (பிப். 2) காலையில் சுவாமி அம்பாள் வீதியுலா, மதியம் சாஸ்தா ப்ரீதி, மாலையில் சண்டிகேஸ்வரா் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா, பைரவா் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

