

திருநெல்வேலி அருகே பழையபேட்டையில் 150 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பழையபேட்டையைச் சோ்ந்த கோமதிநாயகம் மகன் முத்துக்குமாா் (66). இவா், கடந்த 29 ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூா் சென்றாராம்.
பின்னா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 9 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 150 கிராம் தங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பேட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.