குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு
திருநெல்வேலி மாநகரில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பான வழக்குகளில் தாழையூத்து, சங்கா் நகரைச் சோ்ந்த கணேசன் மகன் மணிகண்டன்(27), பொன்னையா மகன் கணேசன்(54) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில்,அவா்கள் தொடா்ந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறி, 2 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வி.வினோத் சாந்தாராம், காவல் உதவி ஆணையா் என்.சுரேஷ் ஆகியோா் காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தனா்.
அதையேற்று, மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவுப்படி, இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

