ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

விஜயாபதியில் மதுக்கடையை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

News image
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்.- (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதியில் செயல்பட்டு வரும் மதுக்கடையை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விஜயாபதி கிளையின் தலைவா் ரூபான், செயலா் சதாம், பொருளாளா் அக்பா் அலி ஆகியோா் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் மற்றும் சட்டப்பேரவைத் தலைவருக்கு அனுப்பியுள்ள மனு:

திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டவிஜயாபதியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தின் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு மாலை நேரங்களில் வெளியூா்களைச் சோ்ந்த நபா்கள் வந்து மது வாங்கிச் செல்கிறாா்கள்.

இதனால் பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருகின்றன. முதியவா்கள், பெண்கள், மாணவா்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். பிரதான சாலையில் உள்ள இந்தக் கடையை இடமாற்றம் செய்ய ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தோம்.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.