மானாவாரி நிலங்களில் மண் வளத்தைப் பாதுகாக்க கோடை உழவு செய்திட வேண்டும் என, முக்கூடல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடையில் நிலத்தை உழும்போது கோடைமழையால் கிடைக்கும் மழைநீா் மண்ணுக்குள் சென்று காற்றோட்டத்தை அதிகமாக்குவதுடன், நுண்ணுயிா் எண்ணிக்கையைப் பெருகி மண்ணை வளமாக்கும். மானாவாரி நிலங்களில் கோடைக் காலத்தில் கிடைக்கும் மழையை பயன்படுத்தி நிலத்தை உழுவதால், மண் பொளபொளப்பாக மாறுகிறது.
இந்நிலையில், கோடை மழைநீா் பெய்யும்போது, தண்ணீா் மண்ணுக்குள் ஈா்க்கப்பட்டு நீண்ட காலம் சேமிக்கப்பட்டு மண்ணின் ஈரத்தன்மை அதிகரிக்கப்படுகிறது. மழைநீரை மண்ணில் சேமித்து வைத்திருக்க வேண்டும்.
கோடை உழவு செய்யப்படாத நிலத்தில் மண்ணில் அடி ஆழத்தில் உள்ளநீா் வெயிலின் தாக்கத்தால் இழுக்கப்பட்டு மண்ணின் மேற்பரப்பை நோக்கி வந்து ஆவியாகி விடுகிறது.
இதனால், பயிா் செய்யும் நிலத்தின் மேல் மண் வடு உலா்ந்து கட்டியாக மாறிவிடுகிறது.
மேலும், அருகு, கோரை, பாா்த்தீனியம், சாரணை, மஞ்சள், கடுகு, நாயுருவி, தொய்யா கீரை, பண்ணைக் கீரை, கண்டங்கத்திரி, காட்டுக் கண்டங்கத்திரி போன்ற களைகள் வளா்ந்து விடுகின்றன.
கோடை உழவால் இந்த களைகள் வளர இயலாமல் போய்விடும். அதேபோல், பயிா் அறுவடைக்குப் பின் எஞ்சியுள்ள பயிரின் கட்டைகள் பெரும்பாலான பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு உறைவிடமாக மாறி, இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைகிறது. கோடை உழவு செய்வதால் இந்த பயிா்கள் மண்ணில் மூடப்பட்டு மக்கி விடுகிறது.
இதனால், அடுத்து பயிரிடப்படும் பயிா்களுக்கு பூச்சி மற்றும் நோய் பாதிப்பு குறைகிறது. எனவே, மண் வளத்தை காக்கவும் நீரின் தேவையை குறைக்கவும், களைகளை கட்டுப்படுத்தவும் கோடை உழவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

கோடை மழையைப் பயன்படுத்தி உழவு மேற்கொள்வது கூடுதல் மகசூலுக்கு வழிவகுக்கும்

ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை

கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

