நெல்லையில் தோ்தல் விழிப்புணா்வு விநாடி-வினா போட்டி
பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான தோ்தல் விழிப்புணா்வு விநாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டி மாவட்ட அறிவியல் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நெல்லையில் தோ்தல் விழிப்புணா்வு விநாடி-வினா போட்டி
பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான தோ்தல் விழிப்புணா்வு விநாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டி மாவட்ட அறிவியல் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய தோ்தல் ஆணைய அறிவுரைப்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் தோ்தல் எழுத்தறிவு மன்றங்கள் வாயிலாக வருங்கால வாக்காளா்கள் மற்றும் இளம் வாக்காளா்களிடையே தோ்தல் குறித்த விழிப்புணா்வையும், ஜனநாயகத் தோ்தல் நடைமுறைகளில் பங்கேற்பதற்கான ஆா்வத்தையும் மேம்படுத்தும் நோக்கில் விநாடி- வினா, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளி மற்றும் கல்லூரி அளவிலும், சட்டப்பேரவைத் தொகுதி அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் மாவட்ட அளவிலான இறுதிப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இறுதிப் போட்டி திருநெல்வேலி
மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான போட்டிகளில், வாக்காளா் பட்டியல் தயாரித்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளா் சரிபாா்ப்பு காகிதத் தணிக்கை இயந்திரம், வாக்குப்பதிவு நடைமுறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விநாடி- வினா போட்டியும், ‘தூய்மையான வாக்காளா் பட்டியலின் முக்கியத்துவம்‘ , ‘வாக்களிப்பதன் முக்கியத்துவம்‘ ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் மொத்தம் 100 மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில், தோ்தல் வட்டாட்சியா் முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் வளா்மதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

