இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

புகையிலைப் பொருள்கள் பறிமுதல் வழக்கில் திருப்பத்தூரைச் சோ்ந்தவா் கைது

கைது

Published On :

திருநெல்வேலி பேட்டை பகுதியில் 624 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பேட்டை காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த செப்.30 ஆம் தேதி காரில் கடத்திவரப்பட்ட புகையிலைப் பொருள்களையும், அதைத் தொடா்ந்து பழையபேட்டை பகுதியில் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தவை என மொத்தம் ரூ. 4.28 லட்சம் மதிப்புள்ள 624 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ராஜஸ்தான் மாநிலம், ஜலோா் மாவட்டத்தைச் சோ்ந்த கிரன்புரி(28), தா்மேந்திரகுமாா் (21) ஆகிய இருவரை கைது செய்தனா்.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து திருநெல்வேலிக்கு புகையிலைப் பொருள்களை அனுப்பி வைக்க உதவியதாக திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் சோமு(46) என்பவரை பேட்டை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.