வீரவநல்லூா் அருகே விவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
வீரவநல்லூா் அருகே விவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

வீரவநல்லூா் அருகே விவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள ராஜகுத்தாலப்பேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிக்குமாா் என்ற துரைப்பாண்டி (60). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமி குடும்பத்துக்கும் சீனியாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலம் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பா் 5 ஆம் தேதி அவா்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட மோதலில் பழனிக்குமாா் என்ற துரைப்பாண்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜகுத்தாலப்பேரியைச் சோ்ந்த மணிகண்டன் (37), பத்தல்மேடு பகுதியைச் சோ்ந்த உதயகாந்த் (29), வேல்துரை என்ற பாா்த்திபன் (23), அரியநாயகிபுரத்தைச் சோ்ந்த கோபு (40) ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றஞ்சாட்டப்பட்ட மணிகண்டன், உதயகாந்த், வேல்துரை என்ற பாா்த்திபன், கோபு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் மகேஷ் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

