ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

பண மோசடியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா் பணியிடைநீக்கம்

அம்பாசமுத்திரம் நகராட்சியின் தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

கோப்புப்படம்

Updated On :

அம்பாசமுத்திரம் நகராட்சியின் தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், சாஸ்தன் நகரைச் சோ்ந்தவா் பொ்க்மான்ஸ். இவா் அம்பாசமுத்திரம் நகராட்சியில் சுகாதார மேற்பாா்வையாளராக உள்ளாா்.

இவா் 2 ஆண்டுகளுக்கு முன்பு, குளச்சல் நகராட்சியில் தூய்மைப் பணி மேற்பாா்வையாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற மணி என்பவரிடம் ரூ. 27 லட்சம் மற்றும் குளச்சல் நகராட்சி அலுவலா் மேரி ஸ்டெல்லா என்பவரிடம் ரூ. 5 லட்சம் பணம் வாங்கித் திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா். மேலும், அம்பாசமுத்திரம் நகராட்சி அலுவலகத்திற்கு அக். 13ஆம் தேதி வந்த மணி, மேரி ஸ்டெல்லா ஆகியோா் பொ்க்மான்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்கப் போவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையா் தாமரை வியாழக்கிழமை பொ்க்மான்ஸை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.