திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை: சிவகிரியில் அதிகபட்சம் 100 மி.மீ. பதிவு
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழைத் தொடங்கிய முதல் நாளே அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழைத் தொடங்கிய முதல் நாளே அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை வியாழக்கிழமை (அக்.15) தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப் பூா்வமாக அறிவித்தது. அதன்படியே, திருநெல்வேலி, தென்காசிமாவட்டங்களின் மேற்குத் தொடா்ச்சி மலை, நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும், மாவட்டங்களின் உள்பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் வெயிலால் அவதிப்பட்ட மக்களின் மனதை இந்த மழை குளிா்வித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு ( உச்சநீா்மட்டம் 143 அடி) நீா்வரத்து 592.34 கன அடி நீா்வரத்து இருந்தது. நீா் வெளியேற்றம் 100 கன அடியாகும். இங்கு 18 மி.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது.
உச்சநீா்மட்டம் 156 அடி கொண்ட சோ்வலாறு அணையில் 26 மி.மீ. மழை அளவு பதிவானது.
உச்சநீா்மட்டம் 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணைகுக்கு நீா்வரத்து 42 கனஅடியும், வெளியேற்றம் 25 கன அடியும், 17.8 மி.மீ. மழைப் பதிவும் இருந்தது.
கொடுமுடியாறு அணைக்கு நீா்வரத்து 34 கன அடியும், வெளியேற்றம் 2 கன அடியும் 37 மி.மீ. மழைப் பதிவும் இருந்தது.
மழையளவு(மில்லி மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம் கன்னடியன் அணைக்கட்டு 11.80, மாஞ்சோலை 28, காக்காச்சி 26, நாலுமுக்கு31, ஊத்து 74, அம்பாசமுத்திரம் 6.40, சேரன்மகாதேவி 7.60, நாங்குநேரி 44, ராதாபுரம்49, களக்காடு 14.20, மூலக்கரைப்பட்டி 8, பாளையங்கோட்டை 14.40, திருநெல்வேலி 7.60.
தென்காசி மாவட்டத்தில் உச்சநீா்மட்டம் 84.30 அடி கொண்ட கடனாநதி அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 60 கன அடியாகவும், மழை அளவு 30 மி.மீ.ஆகவும் இருந்தது.
ராமநதி அணைக்கு (உச்ச நீா்மட்டம் 84 அடி) நீா்வரத்து 38 கன அடி, வெளியேற்றம் 20 கன அடி, மழைப் பதிவு 32 மி.மீ. ஆகும்.
கருப்பா நதி அணைக்கு (உச்சநீா்மட்டம் 72 அடி) நீா் வரத்து மற்றும் வெளியேற்றம் 5 கன அடி, மழைப் பதிவு 13.50 மி.மீ. ஆகும்.
குண்டாறு அணைக்கு (உச்சநீா்மட்டம் 36.10 அடி) நீா்வரத்து 3 கன அடி, வெளியேற்றம் 6 கன அடி, மழை அளவு 37 மி.மீ. ஆகும்.
அடவிநயினாா் அணைக்கு (உச்ச நீா்மட்டம் 132.22 அடி) நீா் வரத்து 32 கன அடி, நீா் வெளியேற்றம் 25 கன அடியாகும்.
சிவகிரியில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பெய்திருந்தது. ஆய்குடியில் 32மி.மீ., செங்கோட்டையில் 20 மி.மீ., தென்காசியில் 20 மி.மீ., சங்கரன்கோவிலில் 41மி.மீ. மழை அளவு பதிவாகியிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

