திசையன்விளை அருகே விபத்தில் தனியாா் நிறுவன மேலாளா் பலி
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காா் மீது அரசு பேருந்து மோதியதில், காரில் சென்ற தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.

ஜெரால்டு.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காா் மீது அரசு பேருந்து மோதியதில், காரில் சென்ற தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சோ்ந்த ஸ்டீபன்ராஜ் மகன் ஜெரால்டு (38). திசையன்விளையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றினாா். இவா் தனது காரில் வள்ளியூரில் இருந்து வியாழக்கிழமை நள்ளிரவு உடன்குடிக்கு சென்று கொண்டிருந்தாா்.
மன்னாா்புரம் அருகே நம்பியாற்று பாலத்தில் வந்தபோது திருச்செந்தூரில் இருந்து நாகா்கோவில் சென்ற அரசுப் பேருந்து, காா் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பலத்த காயமடைந்த ஜெரால்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த திசையன்விளை போலீஸாா், தீயணைப்பு படையினா் காரின் சேதமடைந்த பகுதியில் சிக்கியிருந்த ஜெரால்டு சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பினா். உயிரிழந்த ஜெரால்டுக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
விபத்து தொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

