வேளாண் கருவிகள் பராமரிப்பு குறித்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வேளாண் பொறியியல் துறை மூலம் 2013 -14-ம் நிதியாண்டில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 15 அல்லது 16 சிறு, குறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களை உள்ளடக்கிய விவசாயிகள் குழுக்களுக்கு வேளாண் கருவிகளை பராமரிக்க 8 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேளாண் கருவிகள் பராமரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேளாண் பொறியியல் துறை மூலம் 2013 -14-ம் நிதியாண்டில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 15 அல்லது 16 சிறு, குறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களை உள்ளடக்கிய விவசாயிகள் குழுக்களுக்கு வேளாண் கருவிகளை பராமரிக்க 8 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

விவசாய குழுக்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட குழுக்களுக்கு பவர் டில்லர், நெல் நாற்று நடும் இயந்திரம், களையெடுக்கும் கருவி ஆகியவை 2014 -15-ம் நிதியாண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வழங்கப்படும்.

முன்னதாக வேளாண் கருவிகளை பராமரிப்பதற்கான 8 நாள் பயிற்சி வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாய குழு உறுப்பினர்களுக்கு நாகர்கோவில் உதவி செயற் பொறியாளரால் வழங்கப்படும்.

விருப்பமுள்ள சிறு,குறு விவசாயிகள் அல்லது கிராமப்புற இளைஞர்கள் வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர்,, தொழிற்பேட்டை, கோணம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com