கைத்தறி கண்காட்சி: ரூ.50 லட்சம் விற்பனை இலக்கு

நாகர்கோவில் கைத்தறிக் கண்காட்சியில் ரூ. 50 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.

நாகர்கோவில் கைத்தறிக் கண்காட்சியில் ரூ. 50 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
2017 புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கைத்தறி சிறப்பு கண்காட்சி நாகர்கோவில் ராமவர்மபுரம் சுமங்கலி திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ளது. கண்காட்சியை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது:
கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 200 யூனிட்டுகளாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 750 யூனிட்டுகளாகவும் உயர்த்தி வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் கைத்தறி நெசவாளர்கள் தயாரிக்கும் பொருள்களை (சேலை, வேட்டி) வைத்து கண்காட்சி நடத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் குமரி மாவட்டத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சி ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் 30 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இதில் மாவட்டத்திலுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்தும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கண்காட்சிக்கு வந்துள்ளன.
இதில், படுக்கை விரிப்புகள், ஜமக்காளம், தலையணை உறைகள், திரைச்சீலைகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், வேட்டிகள், சேலை ரகங்கள், கேரள செட்முண்டு வேட்டிகள், செயற்கைப் பட்டு சேலை ரகங்கள், பருத்தி சேலைகள் மற்றும் பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், அங்கவஸ்திரம் உள்பட ஏராளமான கைத்தறி ஜவுளி ரகங்கள் இடம்பெற்றுள்ளன.
இக்கண்காட்சியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் கைத்தறி ஜவுளிகளுக்கு 30 சதவீத அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஜவுளிகளை வாங்கி பயன்பெறலாம் என்றார்.
நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் சுந்தரராஜ், துணிநூல் கட்டுப்பாடு அலுவலர் புதியராஜ், மாவட்ட கூட்டுறவு நூற்பாலை சங்கத் தலைவர் சகாயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com