குமரியில் நடமாடும் மருத்துவ ஊர்தி சேவை தொடக்கம்

கன்னியாகுமரியை அடுத்த விஜயநாராயணபுரத்தில் அமைந்துள்ள சாந்திகிரி ஆசிரமம் சார்பில் நடமாடும் மருத்துவ ஊர்தி சேவையை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

கன்னியாகுமரியை அடுத்த விஜயநாராயணபுரத்தில் அமைந்துள்ள சாந்திகிரி ஆசிரமம் சார்பில் நடமாடும் மருத்துவ ஊர்தி சேவையை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
கன்னியாகுமரி சாந்திகிரி ஆசிரமத்தின் 13ஆவது ஆண்டு விழா  வியாழக்கிழமை (அக்.5) நடைபெற உள்ளது. இதையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் சென்று மருத்துவச் சேவை செய்யும் வகையிலான ஊர்தியை சாந்திகிரி ஆசிரமம் அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சேவையை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
மேலும், வியாழக்கிழமை நடைபெறும் விழாவுக்கு கன்னியாகுமரி சாந்திகிரி ஆசிரம தலைமைப் பொறுப்பாளர் அபயா ஞானதபஸ்வி தலைமை வகிக்கிறார். ஒருங்கிணைப்பாளர் பி.முத்துராஜலிங்கம் வரவேற்கிறார். பொறுப்பு அலுவலர் அர்சித் முன்னிலை வகிக்கிறார். விழாவை சாந்திகிரி ஆசிரமச் செயலர் குருரத்தினம் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து நடைபெறும் இலவச மருத்துவ முகாமை ஆன்மிகத் தோட்டம் அருள்பணியாளர் பி.வின்சென்ட் அடிகளார் தொடங்கிவைக்கிறார். நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி வி.உமையொருபாகன் சிறப்புரை யாற்றுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com