முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில இலக்கிய விருது வழங்கும் விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் விருது பெற்ற நூல்கள் ஆய்வரங்கம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். நகரச்செயலர் அ.சீனிவாசன் வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் இரா.இருதயராஜ் நன்றி கூறினார். இதில் கலை இலக்கியா, களப்பிரன், மணிமாறன், ஸ்ரீரசா, லட்சுமிகாந்தன், சைதை ஜே, நீலா, அ.குமரேசன், இரா.தெ. முத்து ஆகியோர் நூல் ஆய்வுரை நிகழ்த்தினர்.
இலக்கிய விருது வழங்கும் விழாவுக்கு மாவட்டத் தலைவர் ஜெ.எம்.ஹசன் தலைமை வகித்தார். நகரத்தலைவர் எ.சாகுல் ஹமீது வரவேற்றார். மாநில பொருளாளர் சு.ராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் க.கணேசன், மாவட்டச் செயலர் ஜெ.ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைப்பொதுச்செயலர் எஸ்.கருணா விருது பெற்றவர்களை அறிமுகம் செய்து பேசினார்.
விழாவில் உதயசங்கர் எழுதிய மாயக்கண்ணாடி, ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம், வேங்கடாசலபதி எழுதிய எழுக நீ புலவன், இரா.முருகவேள் எழுதிய முகிலினி, இரா.பூபாலன் எழுதிய ஆதிமுகத்தின் காலப்பிரதி, அ.கரீம் எழுதிய தாழிடப்பட்ட கதவுகள், அப்பணசாமி எழுதிய பயங்கரவாதியென புனையப்பட்டேன், சி.லஷ்மணன் மற்றும் கோ.ரகுபதி எழுதிய தீண்டாமைக்குள் தீண்டாமை, புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும், கா.அய்யப்பன் எழுதிய மணிமேகலை பன்நோக்கு வாசிப்பு ஆகிய நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பாராட்டிப் பேசினார். மாவட்ட இணைச் செயலர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.
இதில் கவிஞர்கள் குமரித்தோழன், குமரி எழிலன், தக்கலை ஹலீமா, கு.சந்திரன், ம.சுஜா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இணைச் செயலர்கள் ஜான் இளங்கோ, குமரேசன், மாநிலக்குழு உறுப்பினர் ஆனந்த் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com