விசைப்படகு பழுது: குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் லட்சத்தீவில் சிக்கித் தவிப்பு

குமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்கள் விசைப்படகு பழுதானதால் லட்சத்தீவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்கள் விசைப்படகு பழுதானதால் லட்சத்தீவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம்,  தூத்தூரைச்  சேர்ந்த கிளிட்டஸ் என்பவருக்குச் சொந்தமான லூமானுஸ் என்ற விசைப்படகில்,  நீரோடி, தூத்தூர் மற்றும் கேரள மாநிலம் கருங்குளம்,  வடமாநில மீனவர்கள் உள்பட 13 பேர் கடந்த அக். 15 ஆம் தேதி  தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கர்நாடக மாநிலம், மங்களாபுரம் கடல் பகுதியிலிருந்து  200 கடல் மைல் தொலைவில் கடந்த 9ஆம் தேதி அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகின் இயந்திரம் பழுதாகியுள்ளது. 
இதனால் மீனவர்கள் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், விசைப்படகு காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, லட்சத்தீவு அருகே 13 மீனவர்களும் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தெற்காசிய மீனவ தோழமை பொதுச் செயலர் சர்ச்சிலி கூறியதாவது:  
லட்சத்தீவில் 13 மீனவர்களும் தவித்து வருவது குறித்து மும்பையிலுள்ள இந்திய கடலோரக் காவல்படை மற்றும் மீட்பு  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோரக் காவல்படையினர் கடல் பகுதியில்  சனிக்கிழமை மேற்கொண்ட ஆய்வில், லட்சத்தீவு பகுதியில் மீனவர்கள் விசைப்படகுடன் தத்தளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கப்பல் மூலம் மீட்டு பாதுகாப்பாக கரைசேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com